போராட்ட களம் சென்று பேராதரவு வழங்குங்கள் : வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம் சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள்
"அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு - காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"போராட்டக் களத்துக்கு அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர்.
ஆகவே, வடக்கு, கிழக்கிருந்து இளைஞர்கள் அங்கு சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். எமது நிலைப்பாட்டை அங்கே தெரிவிக்க வேண்டும்" எனவும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam