சுமந்திரன் தோல்வியுற்றால் இதுவே முடிவு
இலங்கை தமிழரசு கட்சியில் நடைபெற இருக்கும் தலைமைத்துவ தேர்தல் கட்சியை பிளவுபடுத்தும் என்கிற அச்சம் நிலவுவதாக கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.
ஆங்கில அறிவும் சட்ட புலமையும்
தலைமைத்துவத்திற்கான மேலதிக தகமையாக கருத தேவையில்லை என்றும் மக்களை ஈர்க்கக் கூடியதும் பிரிந்த தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்துச் செல்லக்கூடிய தலைமையே தற்போது தேவை அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் சிறீதரன் தலைவராக வருவதையே விரும்புகின்றனர்.
சுமந்திரனின் தோல்வி கட்சிக்குள் ஏற்படுத்தும் பிளவுகளை விட சிறீதரனின் தோல்வி கட்சி தொண்டர்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |