கரட்டுக்குப் பதிலாக வேறு மரக்கறிகளை சாப்பிடுங்கள்! இப்படி கூறுகிறார் பிரசன்ன
கரட் விலை அதிகரித்தால் அதை விட்டு வேறு மரக்கறிகளை உண்ணுமாறு மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர அறிவுரை வழங்கியுள்ளார்.
நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கேரட் விலை
அதேவேளை கரட் விலை சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மரக்கறி விலைகள் வானமளவிற்கு உயர்ந்துள்ளதுடன் வரலாறு காணாத வகையில் கரட் விலை அதிகரித்துள்ளது என்பது உண்மை தான்.
அதற்கு மாற்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கரட் தான் சாப்பிடனும் என்று அவசியம் இல்லை. வேறு எதுவும் சாப்பிடலாம் எனவும் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் கடும் குற்றச்சாட்டு
அதிக மழை வீழ்ச்சி காரணமாகவே மரகறிகளின் விலைகள் அதிகரித்ததாக அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், தற்போது மழை வீழ்ச்சி குறைந்துள்ளது. மரகறிகளின் விலைகள் குறையவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் கலப்பின விதைகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல காரணிகள் காரணமாகவே மரகறிகளின் விலைகள் குறையவில்லை என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் கரிம உரங்களை அறிமுகப்படுத்தியதை விட மரக்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளதால், மரக்கறிகளின் விலையை குறைப்பதற்கு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
