சுமந்திரனுக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார்.
அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும், நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri