அதிகாரப் பகிர்வில் ஆர்வமாக உள்ளோம்: ரணிலிடம் சுமந்திரன் எடுத்துரைப்பு
யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் “நாங்கள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வில் ஆர்வமாக உள்ளோம்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி
“யாழ்.போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாங்கள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வில் ஆர்வமாக உள்ளோம். சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு பகுதிகள் அரசாங்க அதிகாரம் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு பகுதிகள் என்பதை நாங்கள் அறிவோம்.
குறிப்பாக யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.
எந்தவொரு சமூகத்தின் இருப்பிலும் சுகாதாரப் பாதுகாப்பு ஒரு அடிப்படைப் பகுதியாகும், மேலும் பெண்கள் சுகாதார சேவைகளுக்கான இந்த சிறப்பு மையத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri