பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ள சுமந்திரன்
இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் யாழ்;ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், நாட்டில் தற்போது நிலவும் பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பின்போது இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முடியும் வரை பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி விக்கிரமசிங்க. இதன்போது சுமந்திரனுக்கு விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் மீறல் மனு
நீதிமன்றத் தீர்ப்பை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தானும் ஒருவராக இருப்பதால், தேர்தல் மீறல் மனுக்கள் வடிவில் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அரசியலமைப்பு ரீதியில் நியமனம் செய்யும் அதிகாரம் என்ற வகையில், நியமனம் வழங்குவது ஜனாதிபதியின் கடமையாகும் என சுமந்திரன் விளக்கமளித்தார்.
அத்துடன் புதிய பொலிஸ் மா அதிபரை நியமித்தால் தாம் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி கருதினால், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டி ஆட்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும் என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொறிமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், சட்டரீதியான சவால்களுக்கு உட்படுத்தப்படுவதை ஜனாதிபதி தவிர்க்கலாம் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |