ஜே.வி.பி தரப்பின் மீது கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ள சட்டத்தரணி சுகாஸ்

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Janatha Vimukthi Peramuna
By Rakesh Oct 27, 2024 05:55 PM GMT
Report

ஜே.வி.பி. தமது கடந்த கால கொலை வெறிக்கலாசாரத்திலிருந்து இன்னும் திருந்தவில்லை, எதிர்காலத்திலும் மாறப்போவதில்லை என்பதை யாழ். முதன்மை வேட்பாளர் நடந்து கொண்ட விதம் தெளிவாகக் காட்டுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார். 

சர்வகட்சிகளைச் சேர்ந்த யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வில், கேள்வி கேட்ட சக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன் செயற்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "அச்சுறுத்துகின்ற பாணியிலும், சபை நாகரிகத்துக்கு ஒவ்வாத வகையிலும், அரச அதிகாரம் தங்களுடைய கையில் இருக்கின்றது என்ற ஆணவத்தோடும், ஏனைய கட்சிகளையும் பொதுமக்களையும் மதிக்காத ஒரு ஜனநாயக அரசியலுக்கு ஒவ்வாத முறையிலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் நடந்து கொண்டார்.

தென்னிலங்கையில் விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் - யுவதி உட்பட 21 பேர் கைது

தென்னிலங்கையில் விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் - யுவதி உட்பட 21 பேர் கைது

கொள்கை நிலைப்பாடுகள் 

இது, ஜே.வி.பி. தமது கடந்த கால கொலை வெறிக்கலாசாரத்திலிருந்து இன்னும் திருந்தவில்லை, எதிர்காலத்திலும் மாறப்போவதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.


மேலும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள ஜே.வி.பியின் வேட்பாளர்கள், ஜே.வி.பி. முன்வைக்கின்ற கொள்கை நிலைப்பாடுகளுக்கோ அல்லது இலஞ்சம், ஊழல்களை ஓழிப்பதற்கோ தகுதியானவர்கள் அல்லர். ஏனெனில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் பலருடைய மறுபக்கம் அவர்களுடைய கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரு பொது வெளியில் ஏற்பாட்டாளர்கள், பொதுமக்கள், பிற கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் ஜே.வி.பியின் முதன்மை வேட்பாளர் நடந்து கொண்ட விதம் ஒரு அபாயச் சங்கை ஊதி நிற்கின்றது.

ஜே.வி.பி தரப்பின் மீது கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ள சட்டத்தரணி சுகாஸ் | Sukash Blames Jvp Party Politicians

ஒரு ஜனாதிபதிப் பதவியை வைத்துக் கொண்டே இந்த அளவு ஆட்டம் ஆடுகின்ற ஜே.வி.பிக்கு நாடாளுமன்ற அதிகாரமும் கிடைக்கப் பெற்றால் எவ்வளவு தூரம் சர்வாதிகாரமாகச் செயற்படுவார்கள் என்பதற்கு இந்த மக்கள் அரங்கம் சாட்சியாக அமைந்துள்ளது.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மக்கள் சிந்தித்து தென்னிலங்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. இப்படியானவர்களுக்கு வாக்குகளால் ஒரு பதிலடி வழங்கி தமிழ் மண்ணில் இருந்து அவர்களை விரட்டியக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US