சுஜீவவின் இலங்கை - இஸ்ரேல் அறிக்கை தொடர்பில் வலுத்துள்ள கேள்விகள்!
முன்மொழியப்பட்ட இலங்கை - இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தொடக்கக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான கடிதத்தை, "தவறாக" வெளியிடப்பட்டதாக ஒப்புக்கொண்டதால், ஐக்கிய மக்கள் சக்தியிக் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அதை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் இறுதி யுத்த நிலைப்பாடுகளையும், அறிக்கை மீளபெறப்பட்ட விடயத்தையும் குறித்த ஊடகம் மேற்கோள்காட்டியுள்ளது.
எம்.பி.க்களுக்கு அழைப்பு
செப்டம்பர் 4 திகதியிட்ட அறிவிப்பில், செப்டம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், ஒரு அறிக்கையில், இந்த நடவடிக்கை "உண்மையான தவறு" என்று சேனசிங்க ஒப்புக்கொண்டார்.
"இஸ்ரேல்-இலங்கை நட்புறவு சங்கத்தைக் கூட்டுவதற்காக நான் கையெழுத்திட்ட கடிதம் ஒரு உண்மையான தவறு. அந்தக் கடிதத்தை உடனடியாக மீள பெறுவதாகவும், அதை இரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்," என்று அவர் கூறினார்,
மேலும் இந்த முயற்சியை இரத்து செய்யுமாறு நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ச்சியான தாக்குதல்
நாடாளுமன்றம், சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட எந்தவொரு சிரமத்திற்கும் மன்னிப்பு கேட்பதாக சேனசிங்க விளக்கியிருந்தார்.
இந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலைக் கண்டித்து, அதை "பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை" என்று வர்ணித்து, டெல் அவிவ் போர்க்குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டி, சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்த குறித்த அறிக்கை மீள பெறப்பட்ட்டுள்ளது.
இதன்படி குறித்த விடயத்தை மேற்கோள் காட்டிய சர்வதேச ஊடகம், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிற மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட இலங்கை போர்க் குற்றவாளிகளை தற்போதைய எதிர்க்கட்சி, தானே அரவணைத்துக் கொண்டதைக் கருத்தில் கொண்டு, அவரது கருத்துக்கள் கூர்மையான வேறுபாட்டைக் கொண்டிருப்பதாக கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





