மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சுகத் வசந்த தேர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாாளுமன்றக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போது, அவரது பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி முன்மொழிந்த நிலையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க அதை வழிமொழிந்தார்.
தேசியக் கொள்கை
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, சுசந்த குமார நவரத்ன, சட்டத்தரணி சுசந்த தொடவத்த மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சுகத் வசந்த டி சில்வா, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, ஒரு நாடாளுமன்றம் என்ற வகையில், இந்த குழுவின் முக்கிய எதிர்பார்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மீதான பொதுவான இலங்கையர்களின் பார்வையை மிகவும் உணர்திறன் மற்றும் நேர்மறையான ஒன்றாக மாற்றுவதாகும்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 28 ஆண்டுகால பழமையான சட்டத்தை திருத்தி, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய தேசியக் கொள்கையை திருத்துவதே குழுவின் நோக்கமாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகளை வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பு கடந்த 14 ஆண்டுகளாக திறம்பட செயல்படுத்தப்படவில்லை.
இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய குழு தலையிடும் என்றும் சுகத் வசந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan