இரண்டரை மாதங்களுக்குள் ஆயிரத்து நானூறு சிறுவர் தொடர்பான முறைப்பாடுகள்!
நடப்பு ஆண்டின் இரண்டரை மாதகாலத்துக்குள் ஆயிரத்து நானூறுக்கும் அதிகமான சிறுவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகார சபை இந்த அறிவித்தலை வௌியிட்டுள்ளது.
முறைப்பாடுகள்
மார்ச் 10ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு தவறான முறைகள் குறித்த 1401 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் சிறுவர்களின் பாதுகாவல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்புடையவையாகும்.
அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பில் 332 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கான கல்வி மறுப்பு தொடர்பில் 279 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
