தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய வேட்பாளர்
இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த காரைநகர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை மாற்று கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
இதன்படி தமிழ்மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரைநகரின் அபிவிருத்திக்காக தம்முடன் கைகோப்பார்கள் என தான் பலமாக நம்புகின்றேன்.
நிலையான அபிவிருத்தி
பிரதேசசபையின் இறுதி 7 மாதங்கள் தான் தவிசாளராக இருந்து பல அதிரடி அபிவிருத்திகளை இனங்கண்டு செயற்படுத்தியமையை தம்மக்கள் மறக்கமாட்டார்கள் என தாம் திடமாக நம்புகின்றேன்.

முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன் தாம் பலமாக நம்புவதோடு அவரது கட்சியினரின் சட்டப்புலமையை பயன்படுத்தி எதிர்கால காரைநகரின் நிலையான அபிவிருத்திக்கு முறையான திட்டங்களை வகுத்து செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின்(itak) மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri