காணாமல்போயிருந்த பாடசாலை மாணவர்கள் நால்வர் கண்டுபிடிப்பு
நுவரெலியா, நோர்வூட் வென்சர் தோட்டத்தில் காணாமல்போயிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் ராகம பிரதேசத்தில் வைத்து இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளனர்.
இது தொடர்பில் காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விசாரணையில் வெளியான தகவல்
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல்போன மாணவர்கள் நால்வரும் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் நால்வரும் வேலைவாய்ப்பு தேடி ராகம பிரதேசத்துக்குச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாணவர்கள் நால்வரும் ராகம பொலிஸாரின் தலைமையில் அவர்களது பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam