12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து(video)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று(22) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில் எரிந்து சேதமாகியுள்ளது.
தீ விபத்து
தீக்கிரையான நான்கு வீடுகளிலும் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, சில பொருட்களே தீக்கிரையாகியுள்ளன.

மேலும் தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிப்பு

இதேவேளை தீ விபத்து தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் பிரதேச சபை தவிசாளரும், ஹட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.ரட்ணகுமாரும் இணைந்து வழங்கியுள்ளனர்.
| கண்டி பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் பெருக்கம்: மாணவர்கள் பாதிப்பு |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri