கண்டி பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் பெருக்கம்: மாணவர்கள் பாதிப்பு
கண்டி மாநகரத்துக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்டி நகர எல்லைக்குள் கடந்த 6 வாரங்களில் சோதனைக்குட்படுத்தப்பட்ட 32 பாடசாலைகளில் 30 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டதாக கண்டி பிரதான வைத்திய அதிகாரி பசன் பெரகும் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாநகரம்
கண்டி மாநகர எல்லையில் டெங்கு அபாயம் தொடர்பாக கருத்து வௌியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் கண்டி நகர எல்லையில் 100 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 69 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாநகர எல்லையில் 106 பாடசாலை மாணவர்கள் உட்பட 223 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் பூவெலிக்கடை, மாபனாவத்துர, அருப்பல, போவல, முல்கம்பொல மற்றும் சுதுஹும்பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் - ஆபத்தில் சுகாதார கட்டமைப்பு |