காத்தான்குடி கடலில் பெருமளவிலான சூரை மீன்கள் பிடிப்பு
கிழக்கு மாகாணத்தில் (Eastern Province) கடந்த சில மாதங்களாக மிகவும் வறட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில், தற்போது மாகாணத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்துள்ளது.
இதனையடுத்து, காத்தான்குடி கடற்பிரதேசத்தில் இன்று (11.08.2024) காலை மிகவும் அதிகளவிலான சூரை மீன்கள் பிடிபட்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்பிரதேசத்தில் இன்று காலை கடற்றொழிலாளர்கள் பெருமளவிலான சூரை மீன்களை தமது வலைகளில் பிடித்து கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர்.
சூரை மீன்கள்
கரைவலை போன்று வளைச்சல் வலை எனும் கடற்றொழில் முறையூடாக குறித்த சூரை மீன்களை பிடித்ததாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சூரை மீன்கள் இன்று காலை காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சாதாரணமான நேரங்களில் குறித்த மீன் ஒரு கிலோ 700 ரூபா முதல் 800 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri