ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த 2 புலம்பெயர்ந்தவர்கள் பலி
ஆங்கில கால்வாயை(English Channel) சிறிய படகு மூலம் கடக்க முயன்ற இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் நீரோட்ட பகுதியில் இந்த சிறிய படகின் துயரகரமான சம்பவம் அரங்கேறி இருப்பதாக பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறிய படகு விபத்தில் இருந்து 50 புலம்பெயர்ந்தவர்கள் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் கடல் பகுதி
இந்த சம்பவம் தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், பிரான்ஸ் கடல் பகுதியில் சிறிய படகில் நடந்த சோகமான சம்பவத்தில் உயிரிழப்பு நடந்து இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும், இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படக்கூடிய மக்களை சுரண்டு கூடிய குற்றவாளிகளை தண்டிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
இந்த இறப்பு தொடர்பான விசாரணையை பிரான்ஸ் முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
