நானாட்டான் பகுதியில் திடீர் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
நானாட்டான் பகுதியில் சுகாதாரத் துறையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பரிசோதனைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நானாட்டான் பிரதேசத்தில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாகப் பயணத்தடை நாட்களில் வெளியில் நடமாடுகின்ற மற்றும் கடமை நிமிர்த்தமாக சென்ற அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் பேருந்து நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையில் நானாட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் , நானாட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan