ஐரோப்பாவில் நேட்டோ படைகளைக் குறைக்கும் அமெரிக்கா
ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள தனது வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவு, நேட்டோ கூட்டணியில் உள்ள ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையையும், அமெரிக்காவின் பாதுகாப்புப் பங்களிப்பு மீதான அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேட்டோ பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எஃப்-16 மற்றும் எஃப்-15இ போர் விமானங்களின் எண்ணிக்கையை 150லிருந்து 100 ஆகக் குறைக்கவும், கடல்சார் கண்காணிப்பு விமானங்களை 26லிருந்து 15 ஆகக் குறைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
மேலும், எட்டு வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் முற்றிலுமாகத் திரும்பப் பெறப்படவுள்ளதுடன், ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் சில ஏவுகணைப் போர்க்கப்பல்களை வேறு பிராந்தியங்களுக்கு மாற்றவும் ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் அமெரிக்கப் பிராந்தியங்களில் தனது கவனத்தைச் செலுத்துவதற்காகவே, ஐரோப்பாவிலிருந்து படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri