நைஜீரியாவில் ஓராண்டில் 13,000 தீவிரவாதிகள் ஒழிப்பு
நைஜீரியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் 13,000க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அந்நாட்டு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி போலா அகமது தினுபு தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவின் ஜனநாயக தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல்களின் மூலம் நாட்டில் தீவிரவாத மரணங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிலிருந்து 81 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வான்வழித் தாக்குதல்
மேலும், தீவிரவாதப் பாதையைக் கைவிட்டு சுயமாக ஆயுதங்களை ஒப்படைக்கும் போராளிகளை மறுவாழ்வு செய்யும் 'ஆபரேஷன் சேஃப் காரிடார்' திட்டத்தின் மூலம், கடந்த 2023 முதல் இதுவரை சுமார் 124,000 போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆயுதங்களை கீழே வைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் துல்லியமான வான்வழித் தாக்குதல் ஆதரவுடன் நைஜீரிய இராணுவம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி தினுபு பெருமிதத்துடன் முழங்கினாலும், நாட்டில் தொடரும் பள்ளி மற்றும் தேவாலயக் கடத்தல்கள், பணயத்தொகை மிரட்டல்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: முதலீட்டுச் சட்டத்தின் கீழ் தனியார் வழக்குகள் தொடரத் தடை
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan