உணவு ஒவ்வாமையினால் 12 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கம்பஹா - மீரிகம, வெவல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மனையியல் பாட வேளையயில் செயன்முறை பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்களே திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும்12 மாணவர்களே திடீரென உடலில் அரிப்பு ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் மாணவர்கள் மீரிகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் பாடசாலையில் மனையியல் பாட நேரத்தில் உணவொன்றை தயாரித்திருந்ததாகவும் அதை உட்கொண்ட பின்னர் உடல் முழுவதும் அரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெவல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam