யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் மூவர் கைது
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான பொருட்கள்
கடந்த புதன்கிழமை (06.12.2023) வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கி வீட்டில் இருந்த நகை,பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் நாளை (09.12.2023) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
