பாடசாலை அதிபர் இல்லாமையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் (Photos)
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன் ஆரம்ப பாடசாலையில் மாணவர்கள் தமது பாடசாலையில் ஒரு வருட காலமாகப் பாடசாலை அதிபர் இல்லாமையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் மாணவர்கள் தெரிவிக்கையில்,
பாடசாலையில் அதிபர் இல்லாமையால் தாங்கள் பலவிதமான வகையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையுள்ளது.

மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்
கடந்த வருடம் 376 மாணவர்கள் கற்றுவந்தநிலையில், இந்தவருடம் 299 மாணவர்களே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் இல்லாத காரணத்தினால் பல மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று ஒரு சிறந்த பாடசாலை என பலராலும் போற்றப்பட்ட பாடசாலை இப்படி ஒரு நிலைக்கு வந்தமையினை கண்டு பலரும் கவலையிட்டுள்ளனர். எனவே இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு ஓர் புதிய அதிபர் ஒருவரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கபட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam