இலங்கை முழுவதும் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்
இலங்கை முழுவதும் ஆரம்ப நிலைப் பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 94 வீத அதிபர்கள், 90 வீத ஆசிரியர்கள் மற்றும் 46 வீத மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.
இந்த தகவலை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.
இதில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் மாத்திரம் 99.8 வீத ஆசிரியர்கள் மற்றும் 86 வீத மாணவர்கள் சமூகமளித்துள்ளனர்.
நேற்றைய தினத்தில் 9190 பாடசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதன்படி 100 வீத பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் டிசம்பரில் முடிவடைகிறது.
இதன்போது மாணவா்கள் அனைவருமே அடுத்த வகுப்புகளுக்கு தரம் உயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
வடக்கு மாகாணத்தில் பதிவாகிய மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகை விபரம்
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam