65 சதவீதமான பரீட்சாத்திகள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி!
2024 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்தம் 149,964 பாடசாலைகளின் பரீட்சாத்திகள், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மொத்தம் 27,624 தனியார் பரீட்சாத்திகளும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி, மொத்தம் 177,588 பேர் அல்லது பரீட்சை எழுதிய மொத்த விண்ணப்பதாரர்களில் 64,73வீதமானோர் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சை முடிவுகள்
இதற்கிடையில், 420 பாடசாலை பரீட்சாத்திகள் உட்பட 456 பரீட்சாத்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்தரப் பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் மே 2 முதல் மே 16 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 222,774 பாடசாலை பரீட்சாத்திகளும், 51,587 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றினர்.
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டன.

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 23 மணி நேரம் முன்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் டிரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: உலக அரசியலில் பரபரப்பு News Lankasri

எந்த பயிற்சி வகுப்புகளும் இல்லாமல் தினமும் 12 மணி நேரம் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் News Lankasri
