பிரியசாத் கொலையில் சிக்கிய மனைவியின் தங்கை- விரைவில் பிரபல அரசியல் புள்ளி கைது!
தற்போது இலங்கையில் உயிரிழந்த டேன் பிரியசாத் தொடர்பிலும் இதன் பின்னணி தொடர்பிலான செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அந்தவகையில் டேன் பிரியசாத்தின் படுகொலை தொடர்பில் பல கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அதில் டேன் பிரியசாத்தின் மனைவியின் தங்கையும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு சமூக வலைத்தளம் டேன் பிரியசாத்தின் மரணத்திற்கு காத்திருந்தது போன்று அவருடைய செய்திகளை உடனடியாக பிரசுரித்தது. கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இதனால் பொதுஜன பெரமுன கட்சியினருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை கொழும்பிலுள்ள பாதுகாப்பு தரப்பினர்களுக்கு ஒரு தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
அதாவது, அனைவரையும் ஆயத்தமாகக இருங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு தொடர்புடைய மிகப்பெரும் அரசியல் புள்ளியை நெருங்கி விட்டோம், கைது நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
யார் அந்த நபர்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |