கட்டுநாயக்க விமான நிலையத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள பட்டங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் விமான நிலையப் பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
விமானம் தரையிறங்கும் மற்றும் புறப்படும் போது இவ்வாறான செயற்பாடுகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அது எச்சரித்துள்ளது.
விமான நிலையங்களின் அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது பயணிகள், விமானக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆபத்துக்குள்ளாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலாக மாறியுள்ள பட்டங்கள்
அனைவருக்கும் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்போம் எனக் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையங்களிலிருந்து தொலைவில் உள்ள திறந்தவெளிகளில் மாத்திரம் பட்டம் பறக்கவிடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்களின் சிறிய பொறுப்புள்ள செயல் உயிர்களைப் பாதுகாக்க உதவும் எனவும் வானில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய வலயங்களிலிருந்து விலகி, பாதுகாப்பான முறையில் பட்டங்களை பறக்கவிடுமாறு பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.