வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல் - 11 மாணவர்கள் ஆபத்தான நிலையில்
பாடசாலை மாணவர்கள் 11 பேர் சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு, வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊசி மருந்து ஏற்றியதன் காரணமாக ஆபத்தான நிலைக்குத தள்ளப்பட்ட மாணவர்கள், மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 06 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
ஊசி மருந்து
குறித்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சளிக்காக சிகிச்சை பெறச் சென்ற போது, அங்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan