பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் உள்ள சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்புவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெற்றோர், திருமணமான தம்பதிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஒரு நகலை வழங்கினாலும் ஏனைய பிரதிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்படுவதில்லை என கூறப்படுகின்றது.
இதனால் பிறப்பு, திருமணம், இறப்பு நகல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆவண காப்பகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அலுவலகங்களுக்கோ சென்றாலும் பிரதிகள் இல்லாமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
மேலும், சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணம், இறப்பு பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட புத்தகத்தில் உள்ள தகவல்களை நகல் எடுப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பதிவாளர் நாயகம் டபிள்யூ.ஆர்.ஏ.என்.எஸ்.விஜேசிங்கவிடம் வினவிய போது, நாடளாவிய ரீதியில் 400 பிறப்பு, திருமண, இறப்பு பதிவாளர்கள் இருப்பதாகவும், அவ்வாறான சம்பவம் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் ஆராய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 48 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
