சாராய போத்தலுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்
சிலாபம் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர் தனது பாடப்புத்தக பொதியில் சாராய போத்தல் ஒன்றை மறைத்து கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
9 ஆம் ஆண்டில் பயிலும் மாணவன்

9 ஆம் ஆண்டில் பயிலும் இந்த மாணவன் பாடசாலையில் பிரதான நுழைவு வாயில் ஊடாக பாடசாலைக்கு சென்ற போது, அங்கிருந்த மாணவ தலைவர்கள் அவது புத்தக பொதியை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அதில் ஒரு போத்தல் சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவ தலைவர்கள் மாணவனை சாராய போத்தலுடன் அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனது தந்தை வீட்டுக்கு கொண்டு வந்திருந்த விஸ்கி போத்தலை நண்பனுடன் சேர்ந்த அருந்துவதற்காக கொண்டு வந்ததாக மாணவன் கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவனை கடுமையாக எச்சரித்துள்ள அதிபர், இது குறித்து அவரது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri