ஆசிரியரின்றி அசாத்திய திறமையினை வளர்த்துக் கொண்டுள்ள 11 வயது மாணவி
நுவரெலியா - அக்கரபத்தனை, அல்டோரா போட்மோர் தோட்டத்தை சேர்ந்த 11 வயது, அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி, ஆசிரியர் இன்றி யோகா மற்றும் ஜிம்நாஸ்டிக் கலைகளை தானாகவே கற்று அசாத்திய திறமையினை வெளிப்படுத்தி வருகிறார்.
குறித்த மாணவி தெரிவிக்கையில், தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியொன்றினை பார்த்து அதனை போன்று செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து தான் யாருடைய துணையுமின்றி யோகா கலையினை பயின்று வந்தாகவும், பல மேடைகளில் தனது திறமையினை நிகழ்த்தி காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தாகவும், அதன்மூலம் பல நிறுவனங்களிலிருந்து சான்றிதழ்களும் பதக்கங்களும் நினைவுச் சின்னங்களும் கிடைத்தாகவும், ஆனால் வறுமை காரணமாக இந்த உயரிய கலையினை உலகறிய செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவிக்கு பயிற்சிக்கான எவ்வித வசதிகளும் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் தனது வீட்டில் உள்ள மெட்ரசினை மாத்திரம் பயன்படுத்தி பல சாகச நிகழ்வுகளை கற்றுக்கொண்டுள்ளார்.
தாய் தெரிவித்துள்ள விடயம்
இது குறித்த தனது தாய் கருத்து தெரிவிக்கையில், நான்கு பிள்ளைகளை கொண்ட எனது குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தவள் சசிகுமார் திருசிகா. சிறுவயதிலேயே தொலைக்காட்சி பார்த்து இந்த கலையினை கற்று வந்தார். ஆசிரியர் உதவியின்றி பயில்வதால் ஏதாவது வந்து விடுமோ கை கால்களை உடைத்து கொள்வாரோ என்ற பயத்தில் அவரை நிறுத்துமாறு பல தடைவைகள் தடுத்ததாகவும் அதனை தொடர்ந்து பயில வேண்டாம் என அடித்து பயமுறுத்தியதாகவும் ஆனால் அவர் அந்த கலை மீது கொண்டுள்ள பற்றினால் வேலைக்கு போன பின் மெட்ரஸ்ஸினை பயன்படுத்தி பயின்று வந்துள்ளதாகவும் அதனால் தான் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பல ஆசிரியர்களின் உதவியினை நாடி சென்றதாகவும், ஆனால் அவர்கள் ஆரம்ப செலவே 50,000 வரை செலவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தன் காரணமாக, தோட்டத்தில் வேலை செய்து குடும்பத்தை காப்பதே கஷ்டம் என்ற நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பினை கைவிட்டதாகவும், ஆனால் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சாகசங்களை காட்டி சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெரும் போது இந்த கலையினூடாக நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையிருப்பதாகவும் தெரிவித்தார்.


உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri