மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை
வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
ஜ.நிரோஜா என்ற குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் க.பொ.த. (சா/தர) ப் பரீட்சையில் முதல் முறையாக 9A பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி
9A பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவிக்கு அதிபர் பா.பாலசுப்பிரமணியம் ஊக்குவிப்புத் தொகையாக ஒருதொகை பணப்பரிசில் வழங்கி கௌரவித்தார்.
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவர்களும் கல்வி கற்கும் பாடசாலையாக காணப்படுகிறது.
மேலும், அதே பாடசாலை மாணவர்களான த.பிரணவி 7ஏ 2பி, பு.தேனுஜன் 6ஏ பி 2சி, செ.ஆதீசன் ஏ 3பி 4சி, எஸ் சி.சியானா ஏ 4பி 3சி, எஸ் ஜீ.கலையரசன் ஏ 2பி 3சி 2எஸ் ஆகியோரும் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.



கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
