சாதாரண தரப் பரீட்சையில் காரைதீவில் 7 மாணவர்கள் 9A சித்தி
2024ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் காரைதீவு சார்பாக 7 மாணவர்கள் 9A சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த ஆறு மாணவிகள் காரைதீவு பாடசாலைகளில் அதிகூடிய 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
ஜே.சதுஸிகா, பி.சபித்தா, எஸ்.ஹருஸ்ஸியா, எஸ்.மோபிகா, யூ.லோவித்யா, வை.வைசாலி ஆகிய ஆறு மாணவிகளே 9A பெற்றவர்கள் ஆவர்.
சிறந்த பெறுபேறுகள்
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் எஸ்.றவீன் என்ற மாணவன் மாத்திரம் 9 ஏ சித்தி பெற்றுள்ளார். இதைவிட வேறெந்த பாடசாலைகளிலும் 9A சித்தி பெறப்படவில்லை.
அதேவேளை, 2023 இல் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 24 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றிருந்தனர்.
காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்று சாதனை படைத்திருந்தனர். விபுலானந்த மத்திய கல்லூரியில் 5 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
