விமல் வீரவன்ச இனவாதத்தை கட்டவிழ்க்கிறார்.. சபா குகதாஸ் ஆதங்கம்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழப்பட்டு தொடர்ச்சியாக எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் தென்னிலங்கையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களில் தொடர்ச்சியாக இனவாதத்தை கட்டவிழ்த்து பொய்யான சித்தரிப்பை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைகின்றார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "1956ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டுவரை தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களும் அவர்களது குண்டர்களும் இராணுவமும் இணைந்து மேற்கொண்ட இரத்தக் களரியையும் இனப்படுகொலையையும் மறைத்து செம்மணி அகழ்வின் மூலம் தமிழர்கள் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்த முனைகிறார்களா? என பொய்யான பித்தலாட்ட இனவாதத்தை தூண்டுகின்றார்.
சந்திரிக்கா அரசு
செம்மணி மனிதப் புதைகுழியை அகழ்வதால் என்ன பயன் என கேள்வி கேட்பதற்கு விமல் வீரவன்சவிற்கு அருகதை கிடையாது காரணம் கடந்தகால செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் விமல் வீரவன்சவும் முக்கியமானவர்.
சந்திரிக்கா அரசுடன் ஆட்சியில் ஒன்றாக இருந்த 39 ஜெனத்தா விமுக்தி பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் விமலும் ஒருவர்.
செம்மணி புதைகுழியில் இராணுவம் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என்ற வீரவன்சவின் கூற்று, இனங்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முனைவதுடன் இராணுவ சாட்சியங்களுடன் உள்ள விவகாரத்தில் உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது அதனை திசை திருப்பி நீர்த்துப் போகச் செய்வதில் வீரவன்ச போன்ற இனவாதிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இனவாதத்தை தலைதூக்க விடமாட்டேன் என பேச்சளவில் கூறிவரும் ஐனாதிபதி அநுர, தன்னுடைய பழைய முகாமின் சக தோழர் விமல் வீரவன்சவின் இனவாத்திற்கு என்ன செய்யப் போகிறார்” என கேள்வி எழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
