தீக்கிரையான இலங்கையின் பிரபல சுற்றுலா தளத்தின் விடுதி!
இலங்கையின் பிரபல சுற்றுலா தளமான எல்ல பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கந்தே கும்புர பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாகவே இந்த சுற்றுலா விடுதி எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ பரவலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவல்
வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் வேகமாக பரவிய தீ காரணமாக குறித்த சுற்றுலா விடுதி எரிந்துள்ளது.
பண்டாரவளை தீயணைப்புத் துறை, பொலிஸார் மற்றும் காப்பீட்டு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தியத்தலாவை இராணுவப் படையினரின் ஒரு குழுவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
