பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சேர்க்கைக்கு இலஞ்சம்: பாடசாலை அதிபர் அதிரடி கைது
காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(7.9.2026) இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2026-ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் இரு குழந்தைகளைச் சேர்ப்பதற்காக, அஹங்கமவைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஆரம்பத்தில் ரூ. 600,000 கேட்டுள்ளார்.
கைது
இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தத் தொகை ரூ. 3,00,000 ஆகக் குறைக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 1,50,000 அதிபரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மீதிப் பணத்தைக் கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்திய அதிபர், பணத்தைத் தராவிட்டால் குழந்தைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுவதாக மிரட்டியுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், ஹபரடுவ பகுதியிலுள்ள பிரபல கடையில் வைத்து ரூ. 2,50,000 இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அதிபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரான அதிபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening