பேரணியை குழப்பும் நோக்கில் நாமலின் திடீர் கைது! களமிறங்கும் மகிந்த - ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாமல் ராஜபக்ச கைது விவகாரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening