அரசாங்கத்திற்கு எதிராக திருகோணமலையிலும் போராட்டம் (Photos)
திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது .
அதிகரித்தது வரும் விலைவாசியை கண்டித்து அரசுக்கு எதிராக இன்று (04) வியாபார சங்கம் மக்கள் விடுதலை முன்னணி மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கந்தளாய் பஸ் தரிப்பிடத்தில் இருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி வரை மறித்து சுமார் ஒரு மணி நேரம் கோஷங்களை எழுப்பியவாறு கந்தளாய் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - அபயபுர சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டிய குறித்த போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கோட்டா வெளியேறு, மக்களை வாழ விடு, ராஜபக்ச பரம்பரை வெளியேறு போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து
கொண்டதும் குறிப்பிடத்தக்கது.







