இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றில் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் நாடாளுமன்றில் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் கூடியது.
இதன்போது, விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை பெற்று தருமாறு வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
