பிரான்ஸுக்கு எதிராக நியூ கலிடோனியாவில் வன்முறை போராட்டம்
தென் பசிபிக்(South Pacific) பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸ் நிர்வாகத்தின் தீவுக்கூட்டமான நியூ கலிடோனியா வன்முறை போராட்டங்களால் அதிகரித்துள்ளன.
மாகாண தேர்தல்களில் வாக்குரிமையை மாற்றியமைக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் பாரிஸில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், பூர்வீக மக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இந்த சட்டத்தை தங்கள் அரசியல் அதிகாரத்தின் மீதான நேரடி தாக்குதலாகவும், பிரான்ஸ் ஆதரவு வேட்பாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவும் பார்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வன்முறை மோதல்
இந்நிலையில் தற்போது, போராட்டங்கள் பாதுகாப்பு படையினருக்கு இடையேயான வன்முறை மோதல்களாக உருவெடுத்துள்ளன.
இந்த வன்முறையில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தீ வைக்கப்பட்டதன் மூலம் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்கள் நடத்திய முற்றுகை ந்வடிக்கை காரணமாக மருந்து மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |