பனாமாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மேற்கு பனாமாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இருப்பினும் சேதம் குறித்த ஆரம்ப தகவல்கள் எதுவும் இல்லை.
ஹெர்ரேரா, போகாஸ் டெல் டோரோ, வெராகுவாஸ் மற்றும் மேற்கு பனாமாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பனாமாவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பசிபிக் கடற்கரையிலிருந்து பனாமாவின் போகா சிகாவிற்கு தென்-தென்மேற்கே 62 கிலோமீட்டர் (39 மைல்) தொலைவில் 6.2 மைல் (10 கிலோமீட்டர்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam