ஆறாவது உலகக்கோப்பை கனவுடன் களமிறங்கும் அவுஸ்திரேலியாவின் பலம் மற்றும் பலவீனம்

Glenn Maxwell Indian Cricket Team Australia Cricket Team Steven Smith ICC World Cup 2023
By Dev Nov 19, 2023 11:34 AM GMT
Report

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை ஆறாவது தடவையாகவும் வெற்றிகொள்ளும் இலக்குடன் இந்திய அணியை அதன் சொந்த மண்ணியில் அவுஸ்திரேலிய அணி எதிர்கொண்டுள்ளது.

இந்த தொடரில் எந்தவொரு லீக் ஆட்டத்திலும் தோல்வி அடையாத இந்தியா, அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. 

இந்திய அணியை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு, 

பலம் 

அவுஸ்திரேலியாவின் ஆகச்சிறந்த பலமாக நாம் அவர்களின் சகலதுறை வீரர்களை குறிப்பிடலாம். முக்கிய நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் துடுப்பாட்டம் மட்டுமன்றி பந்துவீச்சிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கக்கூடியவர்.

ஆறாவது உலகக்கோப்பை கனவுடன் களமிறங்கும் அவுஸ்திரேலியாவின் பலம் மற்றும் பலவீனம் | Strength And Weaknesses Of Aussies

அணித்தலைவர் பட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயற்படும் அதே வேளையில், அணியின் நிலைக்கு தகுந்தாற் போல் தனது துடுப்பாட்ட வேகத்தை மாற்றியமைக்கக் கூடியவர்.

டிராவிஸ் ஹெட்டின் பந்து வீச்சும் கடந்த போட்டிகளில் சிறப்பாக இருந்ததோடு ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகிய இருவரும் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பந்து வீசக்கூடியவர்களே.

2023 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி

2023 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி

அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு பலமாக அதிரடியான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை கூறமுடியும். டிராவிஸ் ஹெட் காயத்திலிருந்து மீண்டு தொடரின் இடையிலிருந்து விளையாட ஆரம்பித்தாலும், அணிக்கான அவரின் பங்களிப்பு மிக சிறப்பாக உள்ளது.

ஆறாவது உலகக்கோப்பை கனவுடன் களமிறங்கும் அவுஸ்திரேலியாவின் பலம் மற்றும் பலவீனம் | Strength And Weaknesses Of Aussies

டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் அவுஸ்திரேலியாவின் வெற்றிகளில் மிக முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.

தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் எதிரணியின் தொடக்க விக்கெட்டுக்களை கைப்பற்றுவதில் கைதேர்ந்தவராக உள்ளார்.

ஜோஷ் ஹேஸில்வுட் மற்றும் பட் கம்மின்ஸ் இருவரும் ஸ்டார்க்கிற்கு பக்க பலமாக செயற்பட ஆடம் சம்பா சுழற்பந்துவீச்சில் தொடர் முழுவதும் சிறப்பாக செயற்பட்டு 22 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

பலவீனம்

அவுஸ்திரேலியா அணியின் முதல் பலவீனமாக அணியில் ஆடம் சம்பா என்ற ஒரே ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே கொண்டிருப்பதை குறிப்பிடலாம்.

ஆறாவது உலகக்கோப்பை கனவுடன் களமிறங்கும் அவுஸ்திரேலியாவின் பலம் மற்றும் பலவீனம் | Strength And Weaknesses Of Aussies 

அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் போன்ற சில பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் மற்றொரு முழுநேர சுழற்பந்துவீச்சாளர் இல்லாததை ஒரு குறையாகவே கூறலாம்.

மிட்செல் மார்ஷ் போன்ற ஒரு தரமான சகலதுறை வீரர் அணியில் இருந்தும் அவர் இத்தொடரில் இதுவரை ஒரு பந்தையேனும் வீசவில்லை என்பது அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு பின்னடைவு.

சில சுட்டிக்காட்டக்கூடிய குறைகள் இருந்தாலும் அவுஸ்திரேலியா போன்ற ஒரு பலம் பொருந்திய அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிக சவாலான ஒரு விடயம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உலக கோப்பை இறுதி போட்டி: 20 வருடங்களின் பின் மோதும் இந்தியா - அவுஸ்திரேலியா

உலக கோப்பை இறுதி போட்டி: 20 வருடங்களின் பின் மோதும் இந்தியா - அவுஸ்திரேலியா

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் ரணில் எதிர்பார்க்கும் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் ரணில் எதிர்பார்க்கும் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US