இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் ரணில் எதிர்பார்க்கும் மாற்றம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முறையானதொரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கின்றார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். முறையானதொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அது சட்டத்துக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.
அமைச்சரவையின் உபகுழு
அந்த அடிப்படையில் தான் தற்போது அமைச்சரவையின் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமைச்சரவை உபகுழுவானது விரைவில் கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டதாக நிச்சயமாக காணப்படும். விசேடமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தடை தொடர்பிலும், சர்வதேச கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடவுள்ளது.
இதற்கான செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல்கள் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளன என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
