முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு
முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் "மிகவும் நல்ல நிலையில்" உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30 கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாக பயணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீர்குலைந்துள்ள தலைமைத்தும்
இதேவேளை ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் தலைமைத்துவம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தவிர்க்காது என்றும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஹோர்முஸ் நீரிணையின் லாராக் தீவில் அமைந்திருந்த ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் அண்மையில் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15