மகிந்தவுக்கு எதிராக பசில் ராஜபக்ச தீட்டிய சதித்திட்டம்! விரைவில் ஜனாதிபதியாகும் கனவால் நேர்ந்த கதி

Basil Rajapaksa Mahinda Rajapaksa Rajapaksa Family Sri Lanka Government Dilith Jayaweera
By Rakesh Sep 01, 2026 04:04 AM GMT
Report

அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச  சதித்திட்டம் தீட்டி, இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விரைவாக ஜனாதிபதியாகும் கனவில் செயற்பட்டபோது நாம் வேதனையடைந்து ஒதுங்கிக்கொண்டோம் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.

மொனராகலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பசிலின் திட்டம் 

அவர் மேலும் கூறுகையில்,

எங்களை மற்றொரு ராஜபக்சவின் அவதாரம் எனக் கூறிச் சிலர் கூச்சலிடுகின்றனர். அமெரிக்காவில் ஒளிந்துகொண்டு தேசியவாத அரசியலை அழித்த பசில் ராஜபக்ச, மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தாமே ஜனாதிபதியாகும் கனவில் சதித்திட்டம் தீட்டியபோதே நாங்கள் மனவருத்தத்துடன் ஒதுங்கிக்கொண்டோம்.

இன்று நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்கள் கூறினாலும் தனக்குத் தேவையானதையே செய்வேன் எனத் தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான சர்வாதிகாரியை மக்கள் கொண்டுவராத போதிலும் சுயநலமிக்க அரசியல்வாதிகளே கொண்டுவந்தனர்.

மகிந்தவுக்கு எதிராக பசில் ராஜபக்ச தீட்டிய சதித்திட்டம்! விரைவில் ஜனாதிபதியாகும் கனவால் நேர்ந்த கதி | Politicians Were Sidelined By Basil S Conspiracy

இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை பொருளாதாரம் எனில் அதற்கான தீர்வும் பொருளாதாரமாகவே அமைய வேண்டும்.

பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பயன்படுத்திய 'தொழில்முனைவோர் அரசு' கோட்பாட்டையே நாம் முன்மொழிகின்றோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றிக் பேசாமல் வரிகளை விதிப்பது பற்றியும் கருவூலத்தை நிரப்புவது பற்றியும் மட்டுமே பேசுகின்றனர்.

2028 இல் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடன் சுமை குறித்து எந்த உரையாடலையும் அவர்கள் நடத்தவில்லை. செவனகலை சர்க்கரை ஆலையை மூடி அதனை விற்பனை செய்யும் நோக்கிலேயே அரசு செயற்படுகின்றது.

2029 ஆம் ஆண்டாகும் போது 'தொழில்முனைவோர் அரசை' உருவாக்கி, செவனகலை உள்ளிட்ட நிறுவனங்களின் இலாபத்தை மும்மடங்காக உயர்த்தும் வேலைத்திட்டத்தை முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைத்து வழங்குவோம்  என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கொழும்பில் திடீரென உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பில் திடீரென உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பொலிஸார் தீவிர விசாரணை

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை

தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US