2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்
ஜா எல மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.
எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க சிலை
தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.
எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5