“கள்ளத்தோணி” என அவமதித்ததாக குற்றச்சாட்டு! சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி

Sri Lanka Upcountry People Nuwara Eliya Senthil Thondaman
By Shadhu Shanker Oct 05, 2026 10:22 AM GMT
Report

நுவரெலியா, களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் லவர்ஸ்லீப் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று வீட்டுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க தோட்ட நிர்வாகம் தடையினை ஏற்படுத்தியுள்ளதாக வீட்டு உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த காணியில் வீடு அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்திடம் எழுத்துமூலம் அனுமதி கோரியதாகவும், அதனைத் தொடர்ந்து அனுமதி கிடைத்த பின்னர் வீட்டுக்கான அத்திவாரத்தை அமைத்ததாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளத்தோணி

எனினும், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்திவிட்டு வெளிநாடு சென்றதாகவும், அங்கு பணிபுரிந்து பெற்ற பணத்தை பயன்படுத்தி தற்போது மீண்டும் வீட்டின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், லவர்ஸ்லீப் தோட்டத்தின் பிரதி முகாமையாளர் மற்றும் தோட்ட மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வீடு அமைக்கப்படுவதாகத் தெரிவித்து நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக வீட்டு உரிமையாளர் தரப்பு கூறுகிறது.

இதன்போது ஏற்பட்ட வாய்த்தகராறின் போது, நிர்வாக தரப்பைச் சேர்ந்த ஒருவர் தம்மை “கள்ளத்தோணி” என அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் வீட்டு உரிமையாளர் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த உதவி முகாமையாளர், “வீடு கட்டுவதை நிறுத்துமாறு உங்கள் அம்மாவுக்கு தெரிவிக்கப்பட்டது” எனக் கூறியதாகவும், அதற்கான ஆதாரங்களை காண்பிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக வீட்டு உரிமையாளர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வீட்டு நிர்மாணத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அனுமதி தொடர்பிலும், தற்போது நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி மற்றும் தகவல்கள் நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை, மனித கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செந்தில் தொண்டமான் கண்டனம்

இந்தநிலையில், லவர்ஸ்லீப் தோட்டத்தில் தங்களுக்கென வழங்கப்பட்ட காணிப் பகுதியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத்தில் வசிப்பவர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் “கள்ளத்தோணி” எனக் குறிப்பிட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைப்பதற்கு எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது.

தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள். மன்னர் ஆட்சிக் காலங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு இலங்கைக்கு வந்து குடியேறினார்களோ, அதேபோன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையாக அழைத்து வரப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது உழைப்பை அர்ப்பணித்துள்ளனர்.

“கள்ளத்தோணி” என அவமதித்ததாக குற்றச்சாட்டு! சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி | Loversleep Estate House Construction Halted Amid

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், குறித்த பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக, பீற்று தோட்ட முகாமையாளரை, செந்தில் தொண்டமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உரத்த குரலில் ஞானசார தேரர் கூறிய விடயம்..

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US