ஒருநிமிடம் பேச வாய்ப்பளியுங்கள் - நீதிமன்றில் கெஞ்சிய ஞானசார தேரர்! அதிரடியாக மறுத்த நீதிமன்றம்
தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அதனுடன் தொடர்புடைய விபரங்கள் குறித்து கருத்து வெளியிட ஒரு நிமிட அவகாசம் கோரிய ஞானசார தேரரின் கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்காக சிறைச்சாலைக் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட முன்னர் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கோரிக்கை
எனினும் அவரது கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஏகமனதாக நிராகரித்துள்ளது.

அத்துடன் அவரது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this video