ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் சுபாஷ் சுப விக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வழங்குவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம்
மேலும் குறிப்பிட்ட அவர்,
துறவற வாழ்க்கை என்பது மிகவும் தியாகங்கள் நிறைந்த ஒன்றாகும். நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்ட போதிலும், நாட்டின் ஜனாதிபதிக்கு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

எனவே, ஞானசார தேரருக்கு ஏதேனும் ஒரு வழியில் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை நாம் முழுமையாக மதிக்கின்றோம்.
இருப்பினும், இவர் செய்தது எவ்வித கொலையோ, கொள்ளையோ அல்லது அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றமோ அல்ல.
எனவே, இந்த விடயத்தை மானுடபிமானக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்து, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என ஜனாதிபதியை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.