காலி - பத்தேகம முக்கொலைக்கு உளவு பார்த்த நபர் கைது
காலி, பத்தேகமவில் நடந்த முக்கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதி பத்தேகமவில் களு நோனி என்றழைக்கப்படும் குடாவிதானகே சுசிதா இரோஷானி என்ற பெண்ணைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார் மற்றும் அவர் பயணித்த முச்சக்கர வண்டியின் ஆண் ஓட்டுநர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலதிக விசாரணை
காரில் வந்த நான்கு பேரில் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குறிவைக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் வழித்தடம் மற்றும் அதில் இருந்தவர்களின் விவரங்கள் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய தரப்பினருக்கு உளவுத்தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் அம்பலங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்காக சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
கரந்தெனியாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.