யாழில் தமிழர்கள் அனுரவை அரவனைக்க தயாராக உள்ளனர் : சந்திரசேகரன் தெரிவிப்பு
நாட்டினுடைய தேசிய அரசியலில் இன்றைக்கு முன்னிலை வகிக்கின்ற அதே நேரத்தில் நாட்டு மக்களின் குரலாக மாறி இருக்கின்ற அனுரகுமார திஸாநாயக்காவை யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்கள் அரவனைத்து கொள்ள தயாராக உள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொள்ளைக்காரர்களுடைய கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலிலே பலரும் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஆனால் யார் போட்டியிட்டாலும் நிச்சயமாக வெற்றிப் பெற போவது தேசிய மக்கள் சக்தி தான்.
விசேடமாக தமிழ் மக்கள் இன்றைக்கு பொது வேட்பாளர், தமிழ் வேட்பாளர் என கூறப்பபட்ட போதிலும் கூட ஜனாதிபதி தேர்தலில் மக்களின் தீர்ப்பே இறுதியானது என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri